/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குளுனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சிகுளுனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
குளுனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
குளுனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
குளுனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
ADDED : ஜன 07, 2024 05:08 AM

புதுச்சேரி: புதுச்சேரி குளுனி மேல்நிலைப்பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.
குளுனி மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் ரோசிலி முன்னிலை வகித்தார். ஓவியம் வரைதல், பேன்சி நகைகள் தயாரித்தல், களிமண்ணால் செய்யப்பட்ட மண் பானைகள், பட்டு நுால் கொண்டு வளையல்கள் செய்தல், காதணிகள் மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ் கொண்டு கலை பொருட்களை தயாரிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவிகள் தனித்திறமையுடன் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஓவிய ஆசிரியை ஜெயந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.