ADDED : அக் 15, 2025 11:10 PM
புதுச்சேரி: குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி - மயிலம் சாலை, அரசு கல்லுாரி அருகே பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் அந்த கடையை சோதனை செய்து, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த ரூ.500 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கடை உரிமையாளரான வானுாரை சேர்ந்த சங்கர், 56; என்பவரை கைது செய்தனர்.


