/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இன்று குருபூஜை அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இன்று குருபூஜை
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இன்று குருபூஜை
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இன்று குருபூஜை
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இன்று குருபூஜை
ADDED : மே 11, 2025 01:18 AM
புதுச்சேரி: கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை விழா இன்று நடக்கிறது.
கோரிமேடு, வீமக்கவுண்டன் பாளையத்தில் முதல்வர் ரங்கசாமியால் கட்டப்பட்ட அப்பா பைத்தியம் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அப்பா பைத்தியம் சுவாமி பிறந்தநாளை முன்னிட்டு குருபூஜை விழா இன்று (11ம் தேதி) நடக்கிறது.
அதையொட்டி, காலை 7:30 மணிக்கு திருவிளக்கு, புனித நீர் வழிபாடு, 8:00 மணிக்கு ஐங்கரன் வழிபாடு, 8:15 மணிக்கு செந்தமிழில் வேள்வி, 9:15 மணிக்கு நிறை வேள்வி, 9:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:30 மணிக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது.
குருபூஜை விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, அப்பா பைத்தியம் சுவாமிக்கு பூஜை செய்கிறார். தொடர்ந்து, பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.