/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'பட்டியலின மக்களுக்கான திட்டங்கள் அவர்கள் உரிமையை பாதுகாக்கத்தான்' கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு 'பட்டியலின மக்களுக்கான திட்டங்கள் அவர்கள் உரிமையை பாதுகாக்கத்தான்' கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
'பட்டியலின மக்களுக்கான திட்டங்கள் அவர்கள் உரிமையை பாதுகாக்கத்தான்' கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
'பட்டியலின மக்களுக்கான திட்டங்கள் அவர்கள் உரிமையை பாதுகாக்கத்தான்' கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
'பட்டியலின மக்களுக்கான திட்டங்கள் அவர்கள் உரிமையை பாதுகாக்கத்தான்' கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
ADDED : ஜூன் 11, 2025 07:42 AM
புதுச்சேரி; பட்டியலின மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களை சலுகையாக பார்க்கக் கூடாது; அவர்களின் உரிமைகளை பாதுகாக்கத் தான் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
விழாவில் பங்கேற்ற கவர்னர் பேசியதாவது:
சமுதாயத்தில் அனைத்து வகையிலும் பின்தங்கிய ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசுக்கு ஈடுகொடுத்து புதுச்சேரி அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசியல் அமைப்பின் அடிப்படையில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் அக்கறையோடு செயல்படும் முதல்வர் தலைமையிலான புதுச்சேரி அரசையும், அதற்கு உறுதுணையாக செயல்படும் அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். சமுதாயத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதை ஏழை, எளிய மக்களுக்கான சலுகையாக பார்க்கிற மனநிலை பொதுவாக நிலவுகிறது.
ஆனால் சமுதாய வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் எல்லாம் அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்கத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முதல் கட்டமாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 447 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது 282 பயனாளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.
இந்த வீட்டு வசதித் திட்டம், தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த அரசு அறிவிப்பு அளவில் மட்டும் இல்லாமல், செயல்பாட்டு அளவிலும் முனைப்பு காட்டி வருகிறது.
இவ்வாறு கவர்னர் பேசினார்.