Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3,500 அரசு பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன கவர்னர் கைலாஷ்நாதன் பெருமிதம்

 3,500 அரசு பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன கவர்னர் கைலாஷ்நாதன் பெருமிதம்

 3,500 அரசு பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன கவர்னர் கைலாஷ்நாதன் பெருமிதம்

 3,500 அரசு பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன கவர்னர் கைலாஷ்நாதன் பெருமிதம்

ADDED : டிச 02, 2025 04:34 AM


Google News
புதுச்சேரி: அரசு துறைகளில் 3,500 அரசு பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்பட்டுள்ளன என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுச்சேரி அரசு துறைகளில் ஆயிரக்கணக்கான பதவிகள் காலியாக இருந்தன.

போதுமான அதிகாரிகள் இல்லை என்றால் மக்கள் நலப் பணிகளில் பெரிய அளவில் தொய்வு ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு தான் இந்த அரசு ஊழியர்கள் தேர்வு பணிகளை நாம் விரைவு படுத்தியுள்ளோம்.

புதுச்சேரி அரசு 2023 ஜுலை முதல் இதுவரை 3,500 பதவிகளை- வெளிப்படையான, நேர்மையான முறையில் நிரப்பி இருக்கிறது. இந்த பணிகள் பொதுவான தேர்வுகள் மூலமாக 2,500 பதவிகள், துறை ரீதியாக 1000 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன.

இன்னும் 500 பதவிகளை நிரப்ப ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அடுத்தாண்டு 300 பதவிகளை நிரப்ப தேர்வுகள் நடைபெற இருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணமாக பணி நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. இப்போது மத்திய அரசிடம் பேசி அந்த நிதி பற்றாக்குறையை சரிசெய்து இந்த அரசு பணி போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறோம். நிர்வாக ரீதியாக நாம் எடுக்கும் இது போன்ற நடவடிக்கைகள் புதுச்சேரி நிர்வாகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

இந்த அரசு வேலைஉங்களுடைய உழைப்பு, நம்பிக்கை, முயற்சிக்கு தரப்படும் பரிசு. உங்களுடைய பெற்றோர்கள், உறவுகள் செய்த தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. நீங்கள் உங்கள் தாய்-தந்தைக்கும் இந்த நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

அரசு வேலையை நாட்டின் வளர்ச்சிக்காக தரப்படும் ஒரு வாய்ப்பாக பாருங்கள்.உங்களுடைய உழைப்பு, உறுதி, நேர்மை, பொறுப்பு உணர்வுஇவை தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் வழி காட்டும்

இவ்வாறு கவர்னர் பேசினார்.

ரங்கசாமி அரசுகு்கு கவர்னர் திடீர் பாராட்டு

விழாவில் கவர்னர் பேசும்போது, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன பெருமழை பெய்து இருக்கிறது. அரசு எடுத்த முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. முதல்வர் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையிலும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதை அறிகிறேன். அரசுத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த சவாலான சூழ்நிலையை திறமையாக சமாளித்து இருக்கிறார்கள். மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி இருக்கிறார்கள். அதற்காக முதல்வர் தலைமையிலான புதுச்சேரி அரசையும் பல்வேறு துறை அதிகாரிகளையும் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன். நமக்கு ஒத்துழைப்பு கொடுத்த பேரிடர் மீட்புக் குழுவிற்கும் புதுச்சேரி மக்கள் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us