/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்மைரா கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு பல்மைரா கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு
பல்மைரா கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு
பல்மைரா கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு
பல்மைரா கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு
ADDED : மே 10, 2025 01:18 AM

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் அடுத்த மணப்பட்டு, மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை, மத்திய அரசின் சுற்றுலா திட்டத்தில் கீழ், கடந்த 2018ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உணவு விடுதிகள், ஓய்வு அறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டது. பணிகள் முடிவடையாத நிலையில், அத்திட்டம் கிடப்பில் உள்ளஈ. ஆனாலும் கூட, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.
விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சுற்றுலாவை மேம்படுத்திட வேண்டும் என, கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று மணப்பட்டு மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, சுற்றுலா திட்டம் எப்போது துவங்கப்பட்டது, ஏன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. அதற்கான காரணம், தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏதேனும் தடைகள் உள்ளதா. சுற்றுலா பயணிகள் இங்கு எவ்வளவு பேர் வந்து செல்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் எழுப்பினார்.
மேலும், தனியார் மூலமாக இங்கு சுற்றுலா திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின் போது, சுற்றுலாத் துறை செயலர் மணிகண்டன், இயக்குனர் முரளிதரன், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.