/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கவர்னர் ஒப்புதல்: விரைவில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகிறது367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கவர்னர் ஒப்புதல்: விரைவில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகிறது
367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கவர்னர் ஒப்புதல்: விரைவில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகிறது
367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கவர்னர் ஒப்புதல்: விரைவில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகிறது
367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கவர்னர் ஒப்புதல்: விரைவில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகிறது
ADDED : ஜன 10, 2024 11:03 PM

புதுச்சேரி அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்தை விரிவுப்படுத்தியுள்ளது.
இதற்காக, நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளைத் தவிர்த்து, இதர வகுப்புகள் சி.பி.எஸ்.இ., பாடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டில் 10வது, பிளஸ் 2 வகுப்புகளும் சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடும் தரப்பட்டுள்ள சூழ்நிலையில், ஆசிரியர் பற்றாக்குறை தலை துாக்கியுள்ளது.
ஆசிரியர்கள் பல்வேறு பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து பாடங்கள் போதிக்கப்பட்டன. ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நிரந்தர ஆசிரியர் பணி நியமனத்திற்கு அரசு முடிவு செய்ததால் காலதாமதம் ஆனது.
மொத்தமுள்ள 2,225 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 300 ஆசிரியர் பணியிடங்கள் காலியான இருந்தன. இதேபோல் மொத்தமுள்ள 558 விரிவுரையாளர் பணியிடங்களில் 67 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்த 367 ஆசிரியர் பணியிடங்களை முதற்கட்டமாக நேரடியாக நிரப்ப பள்ளி கல்வித் துறை முடிவு செய்து, கவர்னர் மாளிகை செயலகத்திற்கு அண்மையில் கோப்பு அனுப்பியது. இந்த 367 ஆசிரியர் பணியிடங்களையும் பள்ளி கல்வித் துறை வாயிலாக விரைவில் நிரப்ப தற்போது கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
கவர்னரின் இந்த ஒப்புதல் அறிவிப்பு, விதிமுறைகள் அரசிதழில் வெளியிட்டதும், விரைவில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் பெற பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.புதுச்சேரி அரசு பள்ளிகளில் கொரோனாவுக்கு பிறகு மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளன.
ஆனால் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்த சூழலில் கல்வித்துறையானது ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தது. 77 விரிவுரையாளர்கள், 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நேர்காணலுக்கு அழைத்தது.
அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக அனைத்து தடைகளையும் கடந்து 367 ஆசிரியர் பணியிடங்களை நீண்ட காலத்திற்கு பிறகு பள்ளி கல்வித் துறை நிரப்ப முடிவு செய்துள்ளது, பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.