/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரதி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள்: புத்தாண்டு முடிந்தும் அகற்றாத அவலம்பாரதி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள்: புத்தாண்டு முடிந்தும் அகற்றாத அவலம்
பாரதி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள்: புத்தாண்டு முடிந்தும் அகற்றாத அவலம்
பாரதி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள்: புத்தாண்டு முடிந்தும் அகற்றாத அவலம்
பாரதி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள்: புத்தாண்டு முடிந்தும் அகற்றாத அவலம்
ADDED : ஜன 03, 2024 12:29 AM

புதுச்சேரி :புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து இரு நாட்கள் ஆகியும், பாரதி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கவெளிமாநில சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் இளைஞர்கள் புதுச்சேரி கடற்கரையில் குவிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். புத்தாண்டு அன்று பகல் நேரத்தில் குடும்பம் குடும்பமாக கடற்கரையில் குவிந்தஆயிரக்கணக்கானோர் கடற்கரையின் அழகை ரசித்துவிட்டு,அருகில் உள்ள பாரதி பூங்காவிற்கு படையெடுத்தனர்.
வீடுகளில் இருந்து கொண்டு வந்த உணவுகள், பூங்கா எதிரில் விற்பனை செய்யும் பாணி பூரிகளை வாங்கி வந்து பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புத்தாண்டு அன்று பாரதி பூங்காவில் குவிந்தனர். உணவு அருந்திய அவர்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசி சென்றனர்.
புதுச்சேரி நகராட்சியின் பராமரிப்பில் உள்ள பாரதி பூங்காவில் கடந்த காலத்தில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். தற்போது,5 செக்யூரிட்டி, 4 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
புத்தாண்டு முடிந்து 2 நாட்கள் கடந்தும், பாரதி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை. குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது.
குப்பையில் கிடக்கும் உணவுகளை சாப்பிட ஏராளமான தெரு நாய்களும் பூங்காவில் வலம் வருகிறது.
குவிந்து கிடக்கும் குப்பைகளை கண்டு சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பாரதி பூங்காவை புதுச்சேரி நகராட்சி நிர்வாகம்பராமரிப்பது இல்லை என, முதல்வர் ரங்கசாமியே கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.