/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காந்தி நினைவு நாள்: கவர்னர், முதல்வர் மரியாதைகாந்தி நினைவு நாள்: கவர்னர், முதல்வர் மரியாதை
காந்தி நினைவு நாள்: கவர்னர், முதல்வர் மரியாதை
காந்தி நினைவு நாள்: கவர்னர், முதல்வர் மரியாதை
காந்தி நினைவு நாள்: கவர்னர், முதல்வர் மரியாதை
ADDED : ஜன 31, 2024 02:34 AM

புதுச்சேரி : காந்தி நினைவுநாளையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில் காந்தி நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் துறை சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ராமலிங்கம், தலைமை செயலர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., சார்பில், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.