/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 7ம் தேதி பவுர்ணமி பூஜை நிறுத்தம் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 7ம் தேதி பவுர்ணமி பூஜை நிறுத்தம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 7ம் தேதி பவுர்ணமி பூஜை நிறுத்தம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 7ம் தேதி பவுர்ணமி பூஜை நிறுத்தம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 7ம் தேதி பவுர்ணமி பூஜை நிறுத்தம்
ADDED : செப் 04, 2025 05:15 AM
புதுச்சேரி : புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடத்துவம் வழக்கம்.
இந்நிலையில், ஆவணி மாத பவுர்ணமி தினமான வரும் 7ம் தேதி சந்திர கிரகணம் வருவதால், அன்று நடைபெற இருந்த பவுர்ணமி பூஜைகள் நடைபெறாது. காலை பூஜைகள் முடிந்தவுடன் கோவில் நடை மூடப்பட்டு, மறுநாள் தான் மீண்டும் திறக்கப்படும். இதனை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் டிரஸ்ட் தெரிவித்துள்ளது.