/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட பிரான்ஸ் மாணவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட பிரான்ஸ் மாணவர்கள்
புதுச்சேரி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட பிரான்ஸ் மாணவர்கள்
புதுச்சேரி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட பிரான்ஸ் மாணவர்கள்
புதுச்சேரி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட பிரான்ஸ் மாணவர்கள்
ADDED : ஜூலை 03, 2025 12:49 AM

புதுச்சேரி : குழந்தைகள் நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு தொடர்பான தற்போதைய திட்டங்கள் குறித்து பிரான்ஸ் நாட்டு ரீயூனியன் தீவை சேர்ந்த நர்சிங் கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனை பார்வையிட்டனர்.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள ஒலாந்தரியா தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் செந்தில்குமார் ஏற்பாட்டில பிரான்ஸ் நாட்டு ரீயூனியன் தீவை சேர்ந்த 15 நர்சிங் கல்லுாரி மாணவர்கள் குழு புதுச்சேரி வந்துள்ளனர்.
இவர்கள் குழந்தைகள் நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு தொடர்பான தற்போதைய திட்டங்களைக் தெரிந்து கொள்ளும் விதமாக புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளை பார்வையிட்டு, மருத்துவமனை செவிலியர்களுடன் கலந்துரையாடினர்.