ADDED : ஜூன் 03, 2025 02:04 AM

புதுச்சேரி: புதுச்சேரி சுப்பரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 43 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ரேவதி, ஆசிரியர் ராஜேஷ், உடற்கல்வி ஆசிரியர் கருணாகரன், பள்ளி நுாலகர் சீனுவாசலு ஆகியோர் கலந்து கொண்டனர்.