/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரான்ஸ் நாட்டு உயர் கல்வி கண்காட்சிபிரான்ஸ் நாட்டு உயர் கல்வி கண்காட்சி
பிரான்ஸ் நாட்டு உயர் கல்வி கண்காட்சி
பிரான்ஸ் நாட்டு உயர் கல்வி கண்காட்சி
பிரான்ஸ் நாட்டு உயர் கல்வி கண்காட்சி
ADDED : பிப் 11, 2024 02:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி கேலக்ஸி உயர் கல்வி ஆலோசனை நிறுவனம் சார்பில், ரெசிடென்ஸி ஓட்டலில் 'பிரான்ஸ் நாட்டு உயர் கல்வி கண்காட்சி - 2024 நடந்தது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பொறியியல் மற்றும் பொருளாதார மேலாண்மை உயர் கல்வி நிறுவனங்களில் புதுச்சேரி மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக 22 நிறுவனங்களின் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் 700 மாணவர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியை அமைச்சர் லட்சுமி நாராயணன் குத்து விளக்கு ஏற்றி, துவக்கி வைத்து பேசினார். புதுச்சேரி பிரெஞ்சு துாதர் லிஸ் டால்போட் பரே பிரான்ஸ் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து பேசினார். பிரான்ஸ் நாட்டு இணை வளாக மேலாளர் சுருதி மிரியம் ஜோசப், அஜித் குமார் ஆகியோர் உயர்கல்வி குறித்து பேசினார்.
சென்னை கேலக்ஸி உயர் கல்வி ஆலோசனை நிறுவனர் ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி கேலக்ஸி கிளை மேலாளர் நவநீதம் சுரேஷ் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.