/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தலைமை நீதிபதியின் பேனர் அகற்றும் உத்தரவு; மாஜி எம்.பி., வரவேற்புதலைமை நீதிபதியின் பேனர் அகற்றும் உத்தரவு; மாஜி எம்.பி., வரவேற்பு
தலைமை நீதிபதியின் பேனர் அகற்றும் உத்தரவு; மாஜி எம்.பி., வரவேற்பு
தலைமை நீதிபதியின் பேனர் அகற்றும் உத்தரவு; மாஜி எம்.பி., வரவேற்பு
தலைமை நீதிபதியின் பேனர் அகற்றும் உத்தரவு; மாஜி எம்.பி., வரவேற்பு
ADDED : பிப் 12, 2024 06:34 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சட்டத்தை மதிக்காமல் மிதிக்கிறது என்பதைத்தான் தலைமை நீதிபதியின் பேனர் அகற்றும் உத்தரவு காட்டுகிறது என, முன்னாள் எம்.பி.,ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான ராமதாஸ் அறிக்கை:
புதுச்சேரியில் பேனர், கட் அவுட்டுகளை உடனே அகற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி, மாவட்ட கலெக்டருக்கு பிறப்பித்துள்ள உத்தரவை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது.
புதுச்சேரியில் சட்டத்தை பின்பற்றுங்கள் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு புதுச்சேரி அரசு சட்டத்தை மதிக்காமல் மிதிக்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது. ஐகோர்ட் உத்தரவை அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ மதிக்கவில்லை.
அரசியல் தலைவர்கள் என்று புதுச்சேரியில் வலம் வருபவர்கள் பேனர் வைக்கக் கூடாது என்று உளப்பூர்வமாக முடிவெடுத்தால் மட்டுமே புதுச்சேரியில் பேனர் கலாசாரத்தை ஒழிக்க முடியும், முதல்வர், உள்துறை அமைச்சர், சபாநாயகர் மூவரும் சேர்ந்து புதுச்சேரியில் யாரும் இனிமேல் சட்ட விரோதமாக கட் அவுட், பேனர் வைக்கக் கூடாது. அவர்களுக்கும் யாரும் பதாகைகள் வைக்கக் கூடாது என்று ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டால் மட்டுமே நிலைமை சீரடையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.