Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் துாய்மை பாடம் அசத்திய வௌிநாட்டினர்

கடற்கரையில் துாய்மை பாடம் அசத்திய வௌிநாட்டினர்

கடற்கரையில் துாய்மை பாடம் அசத்திய வௌிநாட்டினர்

கடற்கரையில் துாய்மை பாடம் அசத்திய வௌிநாட்டினர்

ADDED : செப் 07, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
கடற்கரையில் துாய்மை பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர், கூட்டாக யோகா செய்தனர்.

கோட்டக்குப்பம், தந்திராயன்குப்பம் கடற்கரையில் அதிகாலை நேரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டமாக வந்தனர். சூரியனை வணங்கிய அவர்கள், யோகா செய்வதற்கான இடத்தை தேடினர்.அந்த இடம் முழுவதும் குப்பை கூளங்களாக காட்சியளித்தது. சற்றும் தாமதிக்காத அவர்கள், அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்தினர்.

பின், சூரியனை நோக்கிய ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தனர். யோகா ஆசனங்களை செய்து, சூரியனை வணங்கினர்.

அமெரிக்காவை சேர்ந்த சென்சி கிரேஸ்,23,கூறுகையில், 'இது நம்முடைய பூமி பந்து. இதனை நாம் தான் துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

இதில் என்னுடைய நாடு, அவங்க நாடு என்ற பாகுபாடு பார்க்க முடியாது. அதனால் நேரடியாக துாய்மை பணியில் ஈடுபட்டோம்' என்றார்.

இத்தாலியை சேர்ந்த அலப்பந்தரா,33,கூறுகையில், 'துாய்மை பணிக்கு பிறகு எப்படி இந்த இடம், எப்படி அழகாகவும்,அற்புதமாகம் மாறிவிட்டது' என்றார்.

அவர்களை அழைத்து வந்த யோகா பயிற்றுநர் வம்சிகிருஷ்ணா கூறுகையில், 'மைசூரில் தபஸ்வி யோகாஸ்ரமம் வைத்துள்ளேன். அமெரிக்கா, இத்தாலி, போலந்து உள்பட பல நாடுகளில் யோகா சொல்லி தருகிறேன். ஆண்டிற்கு ஒருமுறை இந்தியாவிற்கு சுற்றுலா வருவேன்.

இந்த முறை பஞ்சபூத லிங்கா என்று சிவனின் கோவிலை தரிசிக்க திட்டமிட்டேன். என்னிடம் யோகா பயிலும் அமெரிக்கா, இத்தாலியை சேர்ந்தவர்கள் வந்தனர்.

இந்த அழகிய கடற்கரையில் அதிகாலையில் யோகா செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

குப்பைகள் இருந்ததால், அனைவரும் சேர்ந்து துாய்மை பணியில் ஈடுபட்டு, யோகா செய்தோம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us