ADDED : மே 28, 2025 07:06 AM
புதுச்சேரி : முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும் என, மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் தலைவர் பாலா அறிக்கை:
தற்போது சுப்ரீம் கோர்ட்டில் புதிய விதிமுறைகளின்படி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படித்த மாணவர்களுக்கு அதே கல்லுாரியில் முதுநிலை படிப்பிற்கு இடங்களை வழங்கலாம் என, விதிமுறைகள் உள்ளது.
இதன்படி சென்டாக் மூலம் தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஒவ்வொறு ஆண்டும் அரசு ஒதுக்கீடாக 2018-19 முதல் 2020-21 வரையில் ஆண்டு ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்டாக் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
தற்போது முதுநிலை மருத்துவ தேர்வை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். எனவே புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு சென்டாக் மூலம் அரசு இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே அந்தந்த கல்லுாரியில் படித்த மாணவர்களுக்கு, இடங்களை ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.