Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு வனத் திட்டம் துவக்கம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு வனத் திட்டம் துவக்கம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு வனத் திட்டம் துவக்கம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு வனத் திட்டம் துவக்கம்

ADDED : மார் 23, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், நிலைத்தன்மை மற்றும் காலநிலை ஆய்வு மையம், அரசின் வனம் மற்றும் வனவிலங்குத் துறை சார்பில், சர்வதேச வன நாளை முன்னிட்டு, 'உணவு வனத் திட்டம்' துவங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, பல்கலைக்கழக வளாகத்தின் சுற்றுச்சூழல் வளத்தை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசின் வனத்துறை மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அருள்ராஜன் கலந்து கொண்டு காடுகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம், நிலையான வனச் சூழலியல் அமைப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் அறிவியல் துறைத் தலைவர் சுந்தரபாண்டியன், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும், பல்லுயிரைப் பாதுகாப்பதிலும் வனப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

வாழ்வியல் பள்ளி டீன் ஜோசப் செல்வின் துவக்க உரையாற்றினார். நிலைத்தன்மை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிமாறன் நடராஜன் நன்றி கூறினார்.

உணவு வனத் திட்டம், பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு பழம் தரும் மரங்களை கொண்ட தன்னிறைவு பெற்ற வனத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பசுமையான இடமானது ஆராய்ச்சி, கல்வி மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான ஆய்வகமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us