Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

ADDED : பிப் 26, 2024 11:42 PM


Google News
பாகூர் : நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த மீனவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமானுஜம், 50; மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்துள்ளது. நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடது காலில் இருந்த கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனிடையே, மீண்டும் நோயின் தன்மை அதிகரித்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், வலது காலில் உள்ள கட்டை விரலையும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த ராமானுஜம் நேற்று முன்தினம் இரவு புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us