ADDED : செப் 08, 2025 11:19 PM
புதுச்சேரி: ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் மல்யுத்த போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. அப்போது விளையாட்டு அரங்கில் மேற்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த ஏசியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டது. தவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரசாயன நுரையை அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.