ADDED : ஜூன் 23, 2025 04:54 AM

புதுச்சேரி : கோவில் திருப்பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு செய்தார்.
இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தருமாபுரி அங்காளம்மன் கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு இந்திரா நகர் தி.மு.க., பிரமுகர் சங்கர், கோவில் திருப்பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையை, எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் வழங்கினார்.
தொடர்ந்து ஆலய திருப்பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பார்வையிட்டார்.தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் முருகன், நிர்வாகிகள் தன்ராஜ், சரவணன், ரகு, குமரன், தி.மு.க., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.