ADDED : பிப் 07, 2025 04:16 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : குடும்ப பிரச்னையில், எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அரியாங்குப்பம் டோல்கேட், பல்லவன் தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் மனைவி உஷா, 41; கடன் பிரச்னை தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதில் மனமுடைந்த உஷா, கடந்த 30ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உஷா கடந்த 4ம் தேதி, இறந்தார்.
அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.





