/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வருங்கால ஆட்சிக்கும் சேர்த்துதான் மாநில அந்தஸ்து கேட்கிறேன்; எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி வருங்கால ஆட்சிக்கும் சேர்த்துதான் மாநில அந்தஸ்து கேட்கிறேன்; எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி
வருங்கால ஆட்சிக்கும் சேர்த்துதான் மாநில அந்தஸ்து கேட்கிறேன்; எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி
வருங்கால ஆட்சிக்கும் சேர்த்துதான் மாநில அந்தஸ்து கேட்கிறேன்; எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி
வருங்கால ஆட்சிக்கும் சேர்த்துதான் மாநில அந்தஸ்து கேட்கிறேன்; எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி
ADDED : மே 20, 2025 06:37 AM
புதுச்சேரி: மாநில அந்தஸ்து தேவை. இதைவிட்டுவிட மாட்டோம். தொடர்ந்து வலியுறுத்தி கேட்போம். என எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் கவர்னர் முதல்வருக்கும் பனிப்போர் நிலவி வருகின்றது. அரசு திட்டங்களுக்கு கவர்னர் அனுமதி தருவதில்லை என காங்., - அ.தி.மு.க. பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றன. இதேபோல் கவர்னரிடம் மோதல் வரும்போது தான் முதல்வர் மாநில அந்தஸ்து பிரச்னையை எழுப்புகிறோம் என எதிர்கட்சி குற்றம்சாட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்து சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
எதிர்கட்சிகள் எங்களுடடைய கூட்டணி ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என கூறுகின்றனர். கடந்த 5 ஆண்டு கால காங்., ஆட்சி எப்படி நடந்தது என மக்களுக்கு தெரியும். காங்., ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் சொல்லுகின்றனர். காங்., ஆட்சியில் நான் தான் கொண்டு வந்தேன். அந்த திட்டத்தையும் தான் செயல்படுத்தி வருகின்றோம். அவர்களுடைய எம்.எல்.ஏக்களே சட்டசபையில் பாராட்டி பேசியுள்ளனர்.
எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து எம்.எல்,ஏக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகின்றோம். மாநிலத்தின் உட்கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசும் நிதியுதவி கொடுக்கின்றது. அதை வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறோம். மாநில அரசின் வருவாயை உயர்த்தி வருகின்றோம். அதன் மூலம் தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றோம்.
புதுச்சேரி கவர்னருடன் எந்த பிரச்னையும் இல்லை. மாநில அந்தஸ்துகேட்டு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து அவசியமானது. அரசின் வேகமான செயல்பாட்டுக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
மாநில அந்தஸ்து எனக்காக கேட்பதில்லை. வரும்காலத்தில் ஆட்சியில் வருபவர்களுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம். மத்திய அரசிடம் திட்டங்களை கேட்டு பெறுகிறோம். அமைச்சர்கள் இதற்காக டெல்லி சென்று வருகின்றனர். சட்டசபையில் கூட அனைத்து கட்சிகளும் மாநில அந்தஸ்தினை வேகமாக வலியுறுத்தி கேட்டன. இதற்கு முன்னாடி அப்படி பார்த்ததில்லை. மாநில அந்தஸ்து தேவை. இதைவிட்டுவிட மாட்டோம். தொடர்ந்து வலியுறுத்தி கேட்போம். அரசு பள்ளி மாணவர்களுக்கும் இந்தாண்டே அனைத்து படிப்புகளுக்கும் உள்ஒதுக்கீடு தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.