Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாயிகளின் உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விவசாயிகளின் உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விவசாயிகளின் உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மே 01, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 03:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், கூடுதல் வேளாண் இயக்குநர் (பயிற்சி வழி தொடர்பு திட்டம்) செழியன் பாபு வரவேற்றார். பயிர் ரக பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமை ஆணைய தலைவர் திரிலோச்சன் மகாபத்ரா, ஆணைய பதிவாளர் தினேஷ்குமார் அகர்வால், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி ரெட்டி ஆகியோர் பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் சட்டம் குறித்த புத்தகத்தை வெளியிட்டனர்.

கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெயசங்கர் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், காரைக்கால் பஜன்கோ பேராசிரியர் கிருஷ்ணன், சுவாமிநாதன் பயிர் ரகங்கள் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேளாண்மை மற்றும் உரங்களின் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தார்.

முன்னதாக, புதுச்சேரியில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள், பல்வேறு பயிர் ரங்களை பதிவு செய்வதற்கான நியமனம் துவங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us