/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவசாயிகள் கடன் தள்ளுபடி: இந்திய கம்யூ., வலியுறுத்தல்விவசாயிகள் கடன் தள்ளுபடி: இந்திய கம்யூ., வலியுறுத்தல்
விவசாயிகள் கடன் தள்ளுபடி: இந்திய கம்யூ., வலியுறுத்தல்
விவசாயிகள் கடன் தள்ளுபடி: இந்திய கம்யூ., வலியுறுத்தல்
விவசாயிகள் கடன் தள்ளுபடி: இந்திய கம்யூ., வலியுறுத்தல்
ADDED : பிப் 11, 2024 10:36 PM

புதுச்சேரி: சட்டசபையில் அறிவித்தப்படி விவசாயிகளின் கடன் வட்டியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூ., புதுச்சேரி மாநில குழு கூட்டம் முதலியார் பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் நாராயணா தேசிய அரசியல் நிலை குறித்து பேசினார். மாநில செயலாளர் சலீம் மாநில அரசியல், துணை செயலாளர் சேதுசெல்வம் கட்சியின் பணிகள் குறித்தும் பேசினர்.
தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அந்தோணி, அமுதா, ரவி, மதியழகன், மாநில குழு உறுப்பினர்கள் அபிஷேகம் கீதநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என, அறிவித்த மத்திய அரசையும் அதற்கு துணை போகும் என்.ஆர்.காங்.,யும் கண்டிப்பது.
ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். சட்டசபையில் அறிவித்தப்படி விவசாயிகளின் கடன், வட்டியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அனைவருக்கும் விரிவுபடுத்திட வேண்டும்.
பத்திரப்பதிவுத் துறையில் நடந்துள்ள முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.