/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.57 லட்சம் விபத்து இழப்பீடு பெற போலி இன்சூரன்ஸ்: 6 பேர் மீது வழக்கு ரூ.57 லட்சம் விபத்து இழப்பீடு பெற போலி இன்சூரன்ஸ்: 6 பேர் மீது வழக்கு
ரூ.57 லட்சம் விபத்து இழப்பீடு பெற போலி இன்சூரன்ஸ்: 6 பேர் மீது வழக்கு
ரூ.57 லட்சம் விபத்து இழப்பீடு பெற போலி இன்சூரன்ஸ்: 6 பேர் மீது வழக்கு
ரூ.57 லட்சம் விபத்து இழப்பீடு பெற போலி இன்சூரன்ஸ்: 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 13, 2025 03:34 AM
புதுச்சேரி: போலி இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ரூ. 57 லட்சம் விபத்து காப்பீடு பெற முயன்றதாக 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோரைக்கேணியை சேர்ந்தவர் ராஜேந்திரன்,58; இவரும், மணலிப்பட்டை சேர்ந்த சச்சின்குமார் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பைக்கில் மணலிப்பட்டு பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது.
அதில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சச்சின்குமார் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், விபத்தில் இறந்த ராஜேந்திரனின் மனைவி பத்மினி மற்றும் காயமடைந்த சச்சின்குமார் ஆகியோர் ரூ.57 லட்சம் இழப்பீடு கோரி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தாக்கல் செய்த விபத்து ஏற்படுத்திய காரின் இன்சூரன்ஸ் பாலிசியை, தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த பாலிசி தங்கள் நிறுவனத்துடையதே இல்லை என்றும் போலியாக தயார் செய்திருப்பது தெரிய வந்தது.
அதன்பேரில், அந்நிறுவன மேலாளர் நெய்சி அஜித், தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலி பாலிசியை தயார் செய்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கார் உரிமையாளர் லோகநாதன், ராஜேந்திரன் மனைவி பத்மனி மற்றும் அவரது குடும்பத்தினர், மேலும் விபத்தில் காயமடைந்த சச்சின்குமார் ஆகிய 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.