ADDED : பிப் 12, 2024 06:36 AM

புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்டம், புதுச்சேரி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து, கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லுாரியில் நடத்தின.
கல்லுாரி முதல்வர் ராஜிகுமார் துவக்கி வைத்தார். அகர்வால் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் ஜெயலதா, கண்களில் ஏற்படும் நோய்கள் அதிலிருந்து தற்காத்து கொள்வது பற்றி விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி, ராஜலட்சுமி, கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.