/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண் பரிசோதனை முகாம் எம்.பி.,துவக்கி வைப்பு கண் பரிசோதனை முகாம் எம்.பி.,துவக்கி வைப்பு
கண் பரிசோதனை முகாம் எம்.பி.,துவக்கி வைப்பு
கண் பரிசோதனை முகாம் எம்.பி.,துவக்கி வைப்பு
கண் பரிசோதனை முகாம் எம்.பி.,துவக்கி வைப்பு
ADDED : செப் 01, 2025 07:05 AM

புதுச்சேரி : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த இலவச கண் பரிசோதனை முகாமை செல்வகணபதி எம்.பி., துவக்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் 76 வது பிறந்த நாள் விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராஜ்யசபா எம்.பி., ஏற்பாட்டில் ஜோதி கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் லாஸ்பேட்டை, ஜீவானந்தபுரம் நாடார் சமுதாய மண்டபத்தில் நடந்தது.
முகாமை செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இதில், லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் ஜோதி கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பங்கேற்று, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்தனர். இதில், பரிசோதனை செய்து கொண்ட அனைவரும் வரும் 17 ம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில், கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.