Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதலியார்பேட்டை தொகுதியில் பணிகளை வேகப்படுத்தவில்லை : எம்.எல்.ஏ., மீது முன்னாள் எம்.எல்.ஏ, குற்றச்சாட்டு

முதலியார்பேட்டை தொகுதியில் பணிகளை வேகப்படுத்தவில்லை : எம்.எல்.ஏ., மீது முன்னாள் எம்.எல்.ஏ, குற்றச்சாட்டு

முதலியார்பேட்டை தொகுதியில் பணிகளை வேகப்படுத்தவில்லை : எம்.எல்.ஏ., மீது முன்னாள் எம்.எல்.ஏ, குற்றச்சாட்டு

முதலியார்பேட்டை தொகுதியில் பணிகளை வேகப்படுத்தவில்லை : எம்.எல்.ஏ., மீது முன்னாள் எம்.எல்.ஏ, குற்றச்சாட்டு

ADDED : ஜன 05, 2024 06:43 AM


Google News
புதுச்சேரி : 'நான் கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய எம்.எல்.ஏ., வேகப்படுத்தி முடிக்கவில்லை' என, முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

எம்.எல்.ஏ.,வாக நான் இருந்தபோது, சுதானா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, பல போராட்டங்களை நடத்தி, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குஅனுமதி பெற்றேன். ஆனால், குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இன்ஜினியர்ஸ் காலனியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கும் ஏற்பாடு செய்தேன். அந்த வேலையையும் தற்போதைய எம்.எல்.ஏ., வேகப்படுத்தி முடிக்கவில்லை.

இன்ஜினியர்ஸ் காலனி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வேல்ராம்பட்டு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் மீது கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். தற்போது, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உறுப்பினராக இருந்து அமைச்சர்களிடம் வாதாடி, முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் சாலைகள், வடிகால் வாய்க்கால்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டேன். தற்போது எந்த வேலையையும் வேகப்படுத்தவில்லை.

நான் கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய எம்.எல்.ஏ., முழுமைப்படுத்தி முடிக்கவில்லை. புதிதாக எதையும் கொண்டு வரவில்லை. இனியும் தாமதப்படுத்தினால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us