/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாபாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 07:23 AM

வில்லியனுார் : ஊசுட்டேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஊசுட்டேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேட்டி, சேலை என பாரம்பரிய உடையணிந்து நான்கு அணிகளாக பிரிந்து சமத்துவ பொங்கல் வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் முன்னிலை வகித்தார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.