Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

ADDED : மார் 02, 2026 03:44 AM


Google News
புதுச்சேரி: முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அரும்பார்த்தபுரம் சேர்ந்தவர் கோவிந்தராஜலு, 62; டிரைவர். இவர் உடல்நிலை சரி இல்லாததால் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில், அறையில் துாங்கி கொண்டிருந்தவரை காணவில்லை என, அவரது மனைவி சாந்தி தேடியபோது, வீட்டின் அருகில் உள்ள காலிமனையில், மாமரத்தில் துாக்கில் தொங்கினார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us