/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செவிலியர் பணியிடங்களை கொல்லைப்புறமாக நிரப்ப முயற்சி; வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டுசெவிலியர் பணியிடங்களை கொல்லைப்புறமாக நிரப்ப முயற்சி; வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
செவிலியர் பணியிடங்களை கொல்லைப்புறமாக நிரப்ப முயற்சி; வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
செவிலியர் பணியிடங்களை கொல்லைப்புறமாக நிரப்ப முயற்சி; வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
செவிலியர் பணியிடங்களை கொல்லைப்புறமாக நிரப்ப முயற்சி; வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
ADDED : ஜன 26, 2024 05:19 AM
புதுச்சேரி : கொல்லைப்புறமாக செவிலியர் பணியிடங்களை நிரப்புவதை கைவிட வேண்டும் என, அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி சுகாதாரத்துறையில் 105 செவிலிய அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து அரசின் தேர்வு நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு, எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அறிவிப்பு வெளியிட்ட 105 பேருடன், கூடுதலாக 50 பேரை அறிவிப்பு இல்லாமல் வேலையில் சேர்க்க அதிகாரிகளை முதல்வர் நிர்பந்தம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தேர்தல் நேரத்தில் மற்றவர்களை திருப்திபடுத்த, கொல்லைப்புறமாக அரசு துறைகளில் ஆட்கள் திணிப்பதை முதல்வர் வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது சுகாதாரத்துறை செவிலிய அதிகாரிகள் பணி நியமனத்தில் முதல்வர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியானால் இந்த பணி நியமனம் நிறுத்தப்படும். விண்ணப்பித்த பலருக்கும் வயது மூப்பு காலாவதியாகிவிடும்.
எனவே ஏற்கனவே அறிவித்தபடி சுகாதாரத்துறையில் 105 செவிலிய அதிகாரிகள் தேர்வை உடனடியாக அரசு நடத்த வேண்டும்.
கூடுதலாக 50 பேரை கொல்லைப்புறமாக திணிப்பதை கைவிட்டு, நேர்மையாக புதிய அறிவிப்பு வெளியிட்டு தகுதியானவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


