ADDED : ஜூன் 14, 2025 07:05 AM

நெட்டப்பாக்கம் : மடுகரை சுப்பராயர் கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச புத்தகம் மற்றும் நோட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டம் - 4 பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் தலைமை தாங்கினர். தலைமையாசிரியர் வீரராகவன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலலு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச புத்தகம், நோட்டுகளை வழங்கி, பேசினார்.
ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.