Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வி நிதி உதவியை உடனே வழங்க மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

கல்வி நிதி உதவியை உடனே வழங்க மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

கல்வி நிதி உதவியை உடனே வழங்க மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

கல்வி நிதி உதவியை உடனே வழங்க மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

ADDED : மே 20, 2025 06:44 AM


Google News
புதுச்சேரி : காமராஜர் கல்வி நிதி உதவி சென்டாக் வழியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கு நிதி உண்டா இல்லையா என அறிவித்து சென்டாக் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கவர்னர், முதல்வர், தலைமை செயலருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2022--23ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் இதுவரை காமராஜர் கல்வி நிதி உதவி வழங்கவில்லை.

அதற்கான எந்தவித அரசாணையும் வெளியிடாமல் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் காமராஜர் கல்வி நிதி உதவியை மட்டுமே நம்பி கல்லூரிகளில் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு கல்வியை பாதியில் நிறுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆகையால் அரசு 2022ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதி உதவியை வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு சென்டாக் வழியாக அரசு ஒதுக்கீட்டில் அனைத்து படிப்புகளிலும் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் காமராஜர் கல்வி நிதி உதவி உண்டா, இல்லையா என்பதை முன் கூட்டியே அறிவித்து சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் சென்டாக் நிதி உண்டு என்று ஒரு சில கல்லூரிகளில் ஒரு சில படிப்புகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு சென்டாக் நிதி இதுவரை வழங்கவில்லை.

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சென்டாக் நிதி இல்லை என்று கூறுவதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே 2023--24ம் ஆண்டு முதல் சேர்ந்த அனைத்து படிப்புகளுக்கும் காமராஜர் கல்வி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us