ADDED : பிப் 06, 2024 04:22 AM
துச்சேரி, : மின்நுகர்வோர் குறை தீர்வு முகாம் வரும் 8ம் தேதி நடக்கின்றது.
இது குறித்து புதுச்சேரி மின் துறை கிராமம் வடக்கு இயக்குதல் பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மின் துறையின் மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம் வரும் 8 ம்தேதி கதிர்காமம் ஆனந்தா நகர் இளங்கோ வீதி மற்றும் லாஸ்பேட்டை உதவி பொறியாளர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்க உள்ளது.
எனவே மின் விநியோகம் பெறும் லாஸ்பேட்டை, கோரிமேடு,அசோக் நகர் மின் நுகர்வோர்கள் குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்.
மின் பட்டியல், குறைந்த மின் அழுத்தம், மின் மானிகளின் குறைபாடு, தெருவிளக்கு, மின் நுகர்வு தொடர்புடைய குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.