ADDED : செப் 23, 2025 08:12 AM

புதுச்சேரி : வில்லியனுார், கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மனித வள மேம்பாடு மற்றும் போதை பொருள் தடுப்பு முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். அரசின் தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், மது, போதை பொருட்கள், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பத் பேசினார்.எழுத்தாளர் அரிமரி இளம்பரிதி, கல்வி, அறிவு, தனி மனித ஒழுக்கம், உயர் எண்ணங்கள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள், நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்கள், அவர்களின் தியாகங்கள் குறித்து பேசினார்.
ஆசிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.