/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 26, 2025 11:26 PM

பாகூர்:கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை வாசலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை , தெற்கு பகுதி எஸ்,பி., பக்தவச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பல்கலைக்கழக துணை வேந்தர் நிகர் ரஞ்ஜன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரி, பிசியோதெரபி கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்று, போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி புதுச்சேரி - கடலுார் சாலையில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கிருமாம்பாக்கத்தில் நான்கு முனை சந்திப்பில் முடிவடைந்தது.