Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேராசை பெரும் நஷ்டத்தைதான் தரும் ஆன்லைன் விளம்பரத்தை நம்பாதீங்க... சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

பேராசை பெரும் நஷ்டத்தைதான் தரும் ஆன்லைன் விளம்பரத்தை நம்பாதீங்க... சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

பேராசை பெரும் நஷ்டத்தைதான் தரும் ஆன்லைன் விளம்பரத்தை நம்பாதீங்க... சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

பேராசை பெரும் நஷ்டத்தைதான் தரும் ஆன்லைன் விளம்பரத்தை நம்பாதீங்க... சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

ADDED : செப் 06, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
வாட்ஸ் ஆப், இன்ஸ் டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஓ.ஏ.ஜி., ஆப்பில் 19 ஆயிரத்து 500 முதலீடு செய்தால் 700 ரூபாய் நாள் ஒன்றுக்கு லாபம் தருவதாக விளம்பரம் பரவியது. இதைகண்ட புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். எதிர்முனையில் பேசிய மர்மநபர் ஆன்லைன் முதலீடு குறித்து விளக்கம் அளித்து ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதைநம்பிய சிலர் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அதன்பின் அவர்களுக்கு தெரிவித்தபடி, முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப லாபப்பணம் வந்துள்ளது. இதையடுத்து, லாபப்பணம் பெற்றவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் அந்த ஆப்பில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இதற்கிடையே, அதிக அளவில் பொதுமக்கள் முதலீடு செய்தபின், முதலீடு செய்ததற்கான லாபப்பணம் ஏதுவும் அவர்களுக்கு வரவில்லை. அதன் பிறகே சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக இதுவரையில் 700க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் ஆப்களில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இதுபோன்ற பல்வேறு ஆப்களில் மக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்து வருவது தெரிவித்தும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் மீண்டும் மீண்டும் பணத்தை முதலீடு செய்து இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது.

ஆகவே, மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us