/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தி.மு.க., இளைஞர் அணி கல்வி உபகரணங்கள் வழங்கல்தி.மு.க., இளைஞர் அணி கல்வி உபகரணங்கள் வழங்கல்
தி.மு.க., இளைஞர் அணி கல்வி உபகரணங்கள் வழங்கல்
தி.மு.க., இளைஞர் அணி கல்வி உபகரணங்கள் வழங்கல்
தி.மு.க., இளைஞர் அணி கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜன 13, 2024 07:14 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதியில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை, எதிர்க்கட்சித்தலைவர் சிவா வழங்கினார்.
கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, புதுச்சேரி மாநில தி.மு.க இளைஞர் அணி சார்பில், உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு எழுது பொருட்கள், நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில், சமீபத்தில் நடந்தது.
மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரைக்கண்ணன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு தொகுதி பொறுப்பாளர் கோபால் தலைமை வகித்தார். இதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு, அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எழுது பொருட்கள், நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொண்டர் அணி அமைப்பாளர் வீரய்யன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.