/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு: மதகடிப்பட்டில் தி.மு.க., மறியல் நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு: மதகடிப்பட்டில் தி.மு.க., மறியல்
நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு: மதகடிப்பட்டில் தி.மு.க., மறியல்
நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு: மதகடிப்பட்டில் தி.மு.க., மறியல்
நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு: மதகடிப்பட்டில் தி.மு.க., மறியல்
ADDED : மே 16, 2025 02:18 AM

திருபுவனை: திருபுவனை தொகுதி தி.மு.க., சார்பில், மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் புதுச்சேரி பொதுப்பணித்துறையின் அனுமதி பெற்று நேற்று முன்தினம் 14ம் தேதி நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., நீர்மோர் பந்தலை நேற்று திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் நீர் மோர் பந்தல் கீற்றுக் கொட்டகையை தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்த தி.மு.க., வினர் நேற்று காலை 8:30 மணிக்கு மதகடிப்பட்டு மேம்பாலத்தின் கீழ், திருபுவனை தொகுதி தி.மு.க., செயலாளர் பார்த்திபன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகிலன் அல்லிமுத்து ஆகியோர் தலைமையில் பந்தலை தீ வைத்து எரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து காலை 9;00 மணிக்கு போராட்டம் வாபஸ் ஆனது.
இந்நிலையில் திருபுவனை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.