/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காங்., தலைவர்களுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்புகாங்., தலைவர்களுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு
காங்., தலைவர்களுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு
காங்., தலைவர்களுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு
காங்., தலைவர்களுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு
ADDED : ஜன 28, 2024 04:27 AM
புதுச்சேரியில் காங்., - தி.மு.க., கட்சியினர் இடையே மோதல் வெடித்துள்ளது. தி.மு.க., அமைப்பாளர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இரு தரப்பினரும் பல்வேறு புகார்களை கூறி வருவதால், கூட்டணி கலகலத்துள்ளது.இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று பத்திரிக்கையாளர்களை அழைத்து பதில் அளித்தார். இந்த சந்திப்பு நடந்து முடிந்தவுடன், நாராயணசாமியை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் சந்தித்து பேசினர்.காங்., தலைவர் வைத்திலிங்கத்தையும் அவர்கள் சந்தித்து பேசினர்.
இரு கட்சிகள் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.