Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்யலாம் மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்யலாம் மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்யலாம் மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்யலாம் மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு

ADDED : ஜன 10, 2024 10:59 PM


Google News
புதுச்சேரி: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கலைஞர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பொதுசேவை மையத்தில் அணுகி இலவசமாக பதிவேற்றம் செய்யலாம் என, மாவட்ட தொழில் மையம் அறித்துள்ளது.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செய்திக்குறிப்பு:

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், கிராமப்புற மற்றும் நகர்புற இந்தியாவின் பாரம்பரிய கைவினைஞர்கள், கைவினை தொழிலாளர்களை ஆதரிக்கும் பொருட்டு கடந்தாண்டு துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள் பொது சேவை மையத்தினை மூலம் முன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து, சரிபார்ப்பிக்கு பின் பயனாளிகளுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் அடையாள அட்டை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் இ-வவுச்சர் மூலம் 15 ஆயிரம் ரூபாய் தரப்படும். அடிப்படை பயிற்சி நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் உதவித் தொகையுடன், 5-7 நாட்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சிக்கு பிறகு கைவினை கலைஞர்களுக்கு முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வரை 5 சதவீத வட்டியுடன் வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதனை தவணை முறையில் 18 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.

மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி முடித்தவர்களுக்கு இரண்டாம் தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இத்தொகையினை 30 மாத தவணையில் திருப்பி செலுத்த வேண்டும்.இத்திட்டத்தில் பயனடைய விரும்புவர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி இலவசமாக பதிவேற்றம் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. இச்சேவை முற்றிலும் இலவசம். கிராமப்புற பகுதிகளுக்கான இச்சேவை இதுவரை நீட்டிக்கப்படவில்லை.மத்திய அரசால் இச்சேவை நீட்டிக்கப்படும்போது, அது குறித்த தகவல் தெரிவிக்கப்படும். சந்தேகங்களுக்கு தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகம் அல்லது 0413-2248391 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us