/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு
சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு
சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு
சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு
ADDED : ஜூன் 12, 2025 07:08 AM
புதுச்சேரி, : கரிக்கலாம்பாக்கம் சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை தேசிய வாய் சுகாதார திட்டம் மூலம், கரிக்கலாம்பாக்கம் சுகாதார நல வழி மையத்தில் இயங்கும் பல் மருத்துவ பிரிவுக்கு, நவீன மயமாக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் கேமரா பொருத்தப்பட்ட அதிநவீன பல் மருத்துவ சேர் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் ஆனந்தலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில காசநோய் திட்ட அதிகாரி வெங்கடேஷ், கரிக்கலாம்பாக்கம் சுகாதாரம் மற்றும் நல வழி மைய தலைமை மருத்துவ அதிகாரி திருமலை சங்கர், மாநில வாய் சுகாதார திட்ட நல அதிகாரி கவி பிரியா, கரிக்கலாம்பாக்கம் நலவழி மைய பல் மருத்துவர் சுனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் நவீன பல் மருத்துவ சேரை இயக்கி வைத்து, பல் மருத்துவ நோயாளிகளுக்கு அதன் சேவையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.