/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொகுதியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை கூட்டம்
தொகுதியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை கூட்டம்
தொகுதியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை கூட்டம்
தொகுதியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 23, 2025 05:13 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்னியல், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை, மின்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், பொதுப்பணித்துறை மூலம் நடந்து வரும் சாலை அமைத்தல், குடிநீர் வசதி, வாய்க்கால் அமைக்கும் பணி, மின்துறை மற்றும் கொம்யூன் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தொகுதியில் நிலுவையிலுள்ள அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது நடந்து வரும் அனைத்து வளர்ச்சி பணிகளையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.