Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

 ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

 ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

 ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

ADDED : மார் 11, 2026 03:29 AM


Google News
Latest Tamil News
திருக்கனூர்: மண்ணாடிப்பட்டு தொகுதி,காட்டேரிகுப்பம், லிங்கா ரெட்டிப்பாளையம், சுத்துக்கேணி, தேத்தாம்பாக்கம், கைக்கிளப்பட்டு, திருக்கனுார், சோம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 2 கொடியே 1 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்படுத்துதல், வாய்க்கால் சீரமைத்தல், புதிய குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் 4 வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பள்ளிக்கல்வித் துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கொ. மணவெளியில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு ரூ. 1 லட்சம், கொடாத்துார் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு ரூ. 1 லட்சம், கொடாத்துார் செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ. 2.5 லட்சம் நன்கொடையை அமைச்சர் நமச்சிவாயம் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

தேத்தம்பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியில் புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் நமச்சிவாயம் பூஜை செய்து துவக்கி வைத்தார். அருகில் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us