Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்

உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்

உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்

உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்

ADDED : மே 31, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : உழவர்கரை தொகுதி, தியாகு பிள்ளை நகரில் புதிய விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி அறுசுவை உணவு வழங்கினார்.

உழவர்கரை தொகுதிக் குட்பட்ட தியாகு பிள்ளை நகர் மற்றும் வயல்வெளி நகரில் வசிக்கும் கிறிஸ்துவ மக்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன் கலந்து கொண்டு, ஆலய திருச்சபை பக்தர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்டோருக்கு சொந்த செலவில் அறுசுவை அசைவ உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சபை நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொது மக்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us