/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கும் பின்னணியில் அன்னையின் நிழலாக இருந்த மனிதர் தயானந்த் ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கும் பின்னணியில் அன்னையின் நிழலாக இருந்த மனிதர் தயானந்த்
ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கும் பின்னணியில் அன்னையின் நிழலாக இருந்த மனிதர் தயானந்த்
ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கும் பின்னணியில் அன்னையின் நிழலாக இருந்த மனிதர் தயானந்த்
ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கும் பின்னணியில் அன்னையின் நிழலாக இருந்த மனிதர் தயானந்த்
ADDED : செப் 07, 2025 03:11 AM

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஆரோவில் சர்வதேச நகரம். அன்னையால் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில், உலகம் முழுவதிலிருந்தும் 50,000 பேர், வசிக்கக்கூடிய நகரமாக வடிமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. மனித இன ஒற்றுமையை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இந்த லட்சிய நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அன்னையின் கனவுப்படி, சர்வதேச நகரை உருவாக்கும் பணியில் பலர் ஈடுபட்டு இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானவர் தயானந்த்.அவரின் வயது 95.அன்னையின் நிழலாகவே இருந்து அன்னை கூறியப்படி ஆரோவில்லுக்கான நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். ஒன்றல்ல.. இரண்டல்ல... 1116 நில ஆவணங்களை ஆரோவில்லுக்காக பதிவு செய்து கொடுத்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
புதுச்சேரி சூர்கூப் வீதியில் இருந்தாலும், இன்றைக்கும் அவர் ஹனஹரி ஆரோவில்வாசி தான். அவரது வீட்டை நெருங்கியபோது, வயோதிகம் காரணமாக படுத்த படுக்கையாக இருந்தார்.ஆரோவில் என்றதும் உற்சாகமடைந்தார். நுாற்றாண்டை நெருங்கும் தேகம், முகத்தில் சுருக்கங்கள் எட்டி பார்த்தாலும் பேச்சில் அனல். அவ்வளவு தெளிவு..
இனி அவரே பேசுகிறார்.... '28.02.1968 அன்று வருங்கால நகரமான ஆரோவில்லின் தொடக்க விழாவில், நகரத்தின் மையப் பகுதியான ஆலமரத்தின் அருகே, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் 121 நாடுகளின் பிரதிநிதிகள் சுமார் 5,000 பேர் கூடியிருந்தனர்.
இப்பிரதிநிதிகள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து கொண்டு வந்த மண்ணை, ஆம்பித்தியேட்டரில் வைக்கப்பட்ட, சலவைக் கல்லால் ஆன தாமரை மொட்டு வடிவத் தாழியினுள் இட்டனர்.
அதேநேரத்தில், 4 அம்சங்கள் கொண்ட ஆரோவில் சாசனத்தை ஸ்ரீ அன்னை அளித்தார். ஆரோவில் உருவாக திட்டமிட்டபோது, ஏராளமான சவால்கள் காத்திருந்தது. ஆரோவில் நிலத்தை வாங்க முழு பொறுப்பையும் அளித்தது எனது நேர்மைக்கு கிடைத்த பரிசு.
ஆரோவில்லுக்கு தேவையான நிலங்களை அடையாளம் காண்பது, நிலத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவது, கள அளவீடு பல கடினமான பணியாக இருந்தது.
அன்னையின் அருளால் தான் எல்லாமே சாத்தியமாயிற்று. ஆரோவில்லும் எழுந்து நின்றது. அன்னையின் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை' என்றார்.
தயானந்த் 05.03.1933 இல் பிறந்தார். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் தாவரங்கள் குறித்த இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பயின்றார்.
பின் அவர் டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனக் கல்லுாரியில் தமிழ்நாடு அரசாங்கத்தின் நிபுணராக அனுப்பப்பட்டார்.
1967ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அன்னையின் கனவான ஆரோவில் திட்டத்தின் தன்னார்வலராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.