சாய்ந்துள்ள மின் கம்பத்தால் ஆபத்து
சாய்ந்துள்ள மின் கம்பத்தால் ஆபத்து
சாய்ந்துள்ள மின் கம்பத்தால் ஆபத்து
ADDED : ஜன 07, 2024 04:58 AM

பாகூர் அடுத்த சேலியமேடு - கிருமாம்பாக்கம் செல்லும் சாலையோரம் சிமென்ட் களம் உள்ளது.அதன் அருகே சாலையின் வடக்கு பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர், தெற்கு பகுதியில் உயர் மின்னழுத்த கட்டுப்பாட்டு உகரணங்கள் பொருத்தப்பட்ட மற்றொறு மின் கம்பமும் உள்ளது.இதிலிருந்து அப்பகுதியில் உள்ள விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,தெற்கு பகுதியில் உள்ள மின்கம்பம் நாளுக்கு நாள் சாய்ந்து வருகிறது. அப்படியே விடப்பட்டால், திடீரென ஒரு நாள் முழுவதுமாக சாய்ந்து விழுந்து, மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பமும் சாய்த்து மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மின் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, விபத்து ஏற்படும் முன், சாய்ந்து வரும் மின் கம்பத்தை உடனடியாக சீரமைத்திட மின் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.