ADDED : ஜன 11, 2024 04:07 AM

அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆய்வு
புதுச்சேரி: குண்டும் குழியுமான அம்பேத்கர் சாலையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலை பழுதடைந்ததால் ஆங்காங்கே பேஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. கடந்த மழையின்போது இந்த சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சோனாம்பாளையம் சந்திப்பு முதல் முதலியார்பேட்டை வரை உள்ள சாலை ரூ. 2 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்க கோப்புகள் அனுப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை துறை செயலாளரிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், உப்பளம் அம்பேத்கர் சாலையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை மத்திய கோட்ட உதவி பொறியாளர் பார்த்தசாரதியுடன் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக சாலையில் உள்ள பள்ளங்களை மூடி பேட்ஜ் ஒர்க் செய்ய அறிவுறுத்தினார். பொங்கல் பண்டிகை முடிந்ததும் பள்ளங்களை சரிசெய்து பேட்ஜ் ஒர்க் செய்யப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.