/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கறவை மாடு மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்புகறவை மாடு மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கறவை மாடு மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கறவை மாடு மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கறவை மாடு மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜன 11, 2024 04:02 AM
புதுச்சேரி: கறவை மாடுகள் கோடைகால மேலாண்மை மூன்று நாள் பயிற்சி முகாமிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய புல முதல்வர் செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி விவசாய கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் நபார்டு நிதி உதவியுடன், கறவை மாடுகளின் கோடைகால மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருமாம்பேட் ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடக்க உள்ள இப்பயிற்சி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு கறவை மாடுகள் வைத்திருக்க கூடிய கிராமப்புற இளைஞர்கள், மகளிர் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி முகாமில், கோடை காலத்தில் கறவை மாடு மேலாண்மை, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கறவை மாடு வளர்ச்சி, கோடை காலத்தில் ஊட்டசத்து மேலாண்மை, நோய் மேலாண்மை, நவீன மாட்டு பண்ணையை பார்வையிடல் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். புதுச்சேரியை சார்ந்த இளைஞர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகலுடன் ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்வி, ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 30ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.