Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/3 பேரிடம் ரூ.15.93 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

3 பேரிடம் ரூ.15.93 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

3 பேரிடம் ரூ.15.93 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

3 பேரிடம் ரூ.15.93 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

ADDED : ஜன 20, 2024 06:03 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியில் மூவரிடம் 15.93 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை, பெத்துசெட்டிபேட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி, 29. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி வேலை செய்து சம்பாதிக்காலம் என, மெசேஜ் அனுப்பினார்.

அதை நம்பி விஜயக்குமாரி மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் ஆன்லைன் போர்டல் கணக்கு துவங்கி முதலீடு செய்ய துவங்கினார். சிறுக சிறுக பணம் செலுத்தி மர்ம நபர் கூறிய டாஸ்க்குகளை முடித்தார். கடைசியாக ரூ. 2.34 லட்சம் முதலீடு செய்து ஏமார்ந்தார்.

முத்தியால்பேட்டை அருணகிரி செட்டி தெருவைச் சேர்ந்தவர் முகமது அஸ்கர் கான், 52; அண்ணா சாலையில் இரும்பு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் இசாஜ் அகமது. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலை இருப்பதாக கூறியுள்ளார்.

அதில், ரெஸ்டாரண்ட்டுகளை பிரபலப்படுத்தும் டாஸ்க்குகள் முடித்தால் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, மர்ம நபர்கள் கூறியபடி, ஆன்லைன் போர்ட்டல் திறந்து, பல்வேறு தவணைகளில் ரூ. 4.09 லட்சம் முதலீடு செய்து ஏமார்ந்தார்.

தவளக்குப்பம், கடலுார் சாலையைச் சேர்ந்தவர் பூபாலன், 80; தனியார் மருத்துவமனை ஊழியர். கடந்த 10ம் தேதி இவரது அலுவலக இமெயில் முகவரிக்கு, மருத்துவமனையில் சேர்மன் பெயரில் ஒரு இமெயில் வந்தது. அதில், தான் ஒரு மீட்டிங்கில் இருப்பதாவும், அவசரமாக ரூ. 9.50 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியிருந்தது. இதை நம்பி, பூபாலான் மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ. 9.50 லட்சம் பணத்தை செலுத்தினார்.

அதன் பின்னரே சைபர் கிரைம் மோசடி கும்பல், மருத்துவமனை சேர்மன் பெயரில் போலியான இமெயில் அனுப்பி பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us